Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ன் ஏற்றுமதி அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (17:10 IST)
இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 12.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 13.78 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சென்ற வருடம் மே மாதத்தில் 12.21 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் மே மாத ஏற்றுமதி 12.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதே போல் மே மாதத்தில் இறக்குமதியும் 27.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 24.54 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் பற்றாக்குறை 10.76 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது ஏற்றுமதியைவிட, இறக்குமதி அதிக அளவு இருக்கின்றது.

இந்த நிதி ஆண்டில் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல ், மே ஆகிய இரண்டு மாதங்களில் ஏற்றுமதி 21.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த மாதங்களில் 23.16 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல் இறக்குமதியும் 31.7 விழுக்காடு உயர்ந்துள்ளது. 48.82 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த இரண்டு மாதங்களிலும் பெட்ரோலிய கச்சா எண்ணெ இறக்குமதி 50.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த வருடம் 8.46 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் 5.61 பில்லியன் டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் இறக்குமதி மதிப்பு உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments