Publish Date: Wed, 04 Feb 2026 (14:15 IST)
Updated Date: Wed, 04 Feb 2026 (14:25 IST)
கடந்த வருடம் ஜூன் 27ம் தேதி திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக வேலை செய்து வந்த அஜித்குமார் என்பவர் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் சிக்கினார். 28-ம் தேதி அவர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது.. அஜித்குமார் மீது நகை புகார் அளித்த பெண்ணுக்கும், அஜித்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பெண்ணின் கொடுத்த தூண்டுதலின் பெயரிலேயே இந்த கொலை நடந்ததாக சொல்லப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணன், ராஜா, ஆனந்த் பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது. இந்நிலையில், சிறையில் இருக்கும் 5 காவலர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் அஜித்குமாரை போலீசார் அடித்துக் கொன்றது உறுதியாகியிருக்கிறது. இதில் 10 பேருக்கு தொடர்புள்ளது. முன்விரோதம் எதுவும் காரணம் இல்லை.. டிஎஸ்பி சொன்னதாலயே இவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்று சிபிஐ சொன்னது..
இதையடுத்து கோபமடைந்த நீதிபதிகள் யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும், மனம் பதறுகிறது.. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். தவறு செய்த காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.. காவலர்கள் சிறையிலேயே இருக்கட்டும்.. ஜாமின் கொடுக்க முடியாது என உத்தரவிட்டனர்.