Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சென்செக்ஸ் 17 புள்ளி சரிவு!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:55 IST)
மும்ப ை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை ஏற்ற இறக்கமாக இருந்தன. காலை 11 மணியளவில் சரிய துபவங்கிய பங்குகளின் விலை மதியம் 2 மணிக்கு மேல் அதிகரிக்க துவங்கியது.

ஆனால் ஒரே நிலையாக இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நேற்றைய நிலைமை போல் இன்றும் சரிந்துவிடும் என்ற நிலை சிறிது மாறியது. இறுதியில் அதிக சரிவு இல்லாமல் 17 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளை விற்பனை செய்து, மற்றவைகளை வாங்கும் போக்கு தொடர்ந்தது. இதனால் தான் ஏற்ற இறக்கமாக இருந்தது.

இந்த நிதி ஆண்டின் முதல் நாளான இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 638.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர். இந்திய முதலீட்டு நிறுவனங்களும் 289.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனா, தென் கொரிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. அதே நேரத்தில் ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 17.82 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,626.62 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5.05 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,739.55 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 20.14 புள்ளி அதிகரித்தது. அதே நேரத்தில் மிட் கேப் 32.72, ப ி. எஸ ். இ. 500- 7.98 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 81.05, சி.என்.எக்ஸ். ஐ.டி 30.10, பாங்க் நிஃப்டி 46.90, சி.என்.எக்ஸ் 100- 2.15, சி.என்.எக்ஸ் 500- 8.40, சி.என்.எக்ஸ். மிட் கேப் 33.40, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-0.45 புள்ளிகள் குறைந்தன. சி.என்.எக்ஸ். டிப்டி மட்டும் 3.95 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,728 பங்குகளின் விலை அதிகரித்தது, 920 பங்குகளின் விலை குறைந்தது, 47 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ரியல் எஸ்டேட் 1.17,%, மின் உற்பத்தி பிரிவு 1.16%, உலோக உற்பத்தி பிரிவு 1.49%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.42%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.20%, வாகன உற்பத்தி பிரிவு 1.22%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 3.21%, தொழில்நுட்ப பிரிவு 0.24%, வங்கி பிரிவு 0.96% குறைந்தன.

பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 3.36% அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

மழை சீசன் இன்னும் முடியல.. பொங்கல் வரை இருக்கு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

Show comments