Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (19:51 IST)
பொ‌ங்கலை மு‌ன்‌னி‌ட்டு 15 மற்றும் 16 ஆ‌ம் தேதிகளில் இதுவரை இல்லாத பல புதிய, பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது விஜய் டிவி.

காலை 8 மணி - கலக்கல் மன்றம் :
இதில் சேது, ஜீவா மற்றும் படவா கோபி ஆகியோர் பங்கு பெறுகின்றனர். பட்டிமன்றங்களை வைத்து நடக்கும் ஒரு கலகலப்பான நிகழ்ச்சிதான் இந்த கலக்கல் மன்றம்.

காலை 9 மணி - இதயம் மந்த்ரா காபி வித் அனு:
சிறப்பு விருந்தினராக இயக்குனர், நடிகர், நடன ஆசிரியரான பிரபுதேவா பங்குபெறுகிறார். BOLLYWOOD - ன் பிரபல நடிகரான சல்மான் கான், ஸ்ரீதேவி ஆகியோர் பிரபுதேவாவைப் பற்றி On T Vல் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

காலை 10 மணி - பயமறியா பீமா:
சியான் விக்ரம் மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் திரைக்கு பொங்கல் அன்று வரயிருக்கும் 'பீமா' திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் இசை ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட நிலையில், இந்த திரைப்படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் 'பயமறியா பீமாவில்' ஒளிப்பரப்பாகிறது.

காலை 11 மணி - TVS Scooty த்ரிஷாவுடன் ஒரு பெப்பி பயணம்:
நடிகை த்ரிஷா தனது ஸ்கூட்டியில் ஒரு பெப்பி பயணம் மேற்கொண்டு, தான் படித்த பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களுக்கு சென்று ஜாலியாக பொங்கலை கொண்டாடுகிறார்.

நன்பகல் 12 மணி - ஜோடி பொங்கல்:
விஜய் ஜோடி No.1 ல் பங்குபெறும் ஜோடிகள் எல்லோரும் ஒரு கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டு, பொங்கல் பண்டிகையை கலகலப்பாக கொண்டாடுகின்றனர்.

மதியம் 1 மணி - முதல்வன் ஷங்கர்:
காதலன், ஜெந்தில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் ஷங்கரின் நேர்கானல் இடம் பெறுகிறது.

மதியம் 2 மணி - Independence Day திரைப்படம்
பல விருதுகள் பெற்ற சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான Independence Day திரைப்படம் தமிழில் ஒளிப்பரப்பாகிறது.

மாலை 5 மணி - பழனி - ஒரு சிறப்பு பார்வை
பேரரசுவின் இயக்கத்தில் பொங்கலன்று பரத் நடித்து வெளியாகும் 'பழனி' திரைப்படத்தைப் பற்றிய சிறப்பு பார்வை இடம்பெறுகிறது.

மாலை 5:30 மணி - சிம்புவின் காளை
சிம்புவின் நடிப்பில் வரும் 'காளை' திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் ஒளிபரப்பாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

LIK படத்தில் சிவகார்த்திகேயன்தான் நடித்திருக்கணும்… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

கவினின் ‘கிஸ்’ படம் ரிலீஸ் ஆவதில் அனிருத்தால் ஏற்பட்ட சிக்கல்!

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

Show comments