Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்திய கல்யாண பெருமாள் கோயில் சிறப்பு!

Webdunia
பெருமாள ், திருக்கல்யாண கோலத்தில ், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்த ி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.

கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும ், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும ், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள ், ஸ்ரீதேவ ி, பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும ், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.

அமைவிடம் :

108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம ், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.

திருவிடந்தை - பெயர் காரணம் :

" திரு"வை (லட்சுமியை) தன் இடப்பக்கத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் திரு - இட - எந்தை என்பது மருவி திருவிடந்தை என பெயர் பெற்றுள்ளது.

வராக தீர்த்தமும் - கல்யாண தீர்த்தமும் :

வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும ், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.

ராகு-கேது தோஷ நிவர்த்த ி, திருமண பிரார்த்தனை தலம் :

தம்பதி சமேதராய் ஆதிசேஷன ், பெருமாள் திருவடியை தாங்க சேவை சாதிப்பதால் இப்பெருமாளை சேவிப்பவர்க்கு ராக ு, கேது தோஷங்கள் நீங்குகின்றன.

திருமணமாகாத ஆண்களும ், பெண்களும் இத்தலத்திற்கு வந்து மாலை அணிந்து வேண்டிக்கொண்ட ு, ஒன்பது முறை பிரதட்சணம் வந்து வீடு சென்றால் விரைவில் திருமணம் கூடி வருகிறது.

திருஷ்டிப் பொட்டு :

உற்சவர் நித்யகல்யாண பெருமாள ், கோமளவல்லி தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டி பொட்டு அமைந்துள்ளது. மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்குகின்றன.

தம்பதி சமேதராக (ஆறரை அடி உயரத்துடன்) ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே.

புராண வரலாறு :

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மால ி, மால்யவான ், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும ், பலி மறுத்து விட்டதாகவும ், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும ், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும ், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும ், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.

ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும ், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால ், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.

பாடல் சிறப்பு :

திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.

அழகிய மணவாளதாசர் நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் 92-வது பாசுரத்தில் "தொண்டானேன் திருவிட வெந்தைக்கே செறிந்து" என பாடியுள்ளார்.

குரவை ராமனுஜதாசர் தனது நூற்றெட்டு திருப்பதி திருப்புகழில் 92-வது பாசுரத்தில் "இடவெந்தை பதிவாழ்மேவிய பெருமாளே" என பாடியுள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள் :

1. விஜயராஜேந்திர சோழரின் 35-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1052) திருவிடவெந்தை ஆதிவராக பெருமாளுக்கு இந்த கிராமமே தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

2. முதல் ராஜராஜ சோழனின் 19-வது ஆண்டு கல்வெட்டு (கி.பி.1003) பங்குனி ஊத்திரம் ஆதியாக ஒன்பது நாள் திருவிழா நடத்த மூலதனம் வழங்கிய செய்தியை கூறுகிறது.

3. இதே சோழனின் 29-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1013) பங்குனி உத்திர திருநாளில் பிராமண போஜனத்துக்கு வழங்கிய நன்கொடையை கூறுகிறது.

4. ராஜராஜ சோழனின் 17-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1001) அவர் பிறந்த ஆவணி சதயத்தை ஈறாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்த கட்டளையிட்டதை கூறுகிறது.

5. ராஜ ராஜ சோழனின் 19-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1003) கும்ப ஞாயிறு முழுமையும் பிராமண போஜனத்துக்கு மூலதனம் அளித்ததை கூறுகிறது.

6. திருமங்கையாழ்வார் பெயரில் கலிச்சிங்கன் மடம் ஒன்று இருந்ததையும ், அமாவாசை தோறும் அங்கு பிராமண போஜனம் நடந்ததையும ், குலோத்துங்க சோழனின் 45-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1115) கூறுகிறது.

திருவிழாக்களும ், பூஜைகளும் :

நித்யபடி நான்கு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி சிறப்புடன் நடைபெறுகிறது.

ஆனிகருடசேவ ை, ஆடிப்பூரம ், கஜேந்திரமோட்சம் கருடசேவ ை, ஸ்ரீஜெயந்த ி, உறியடி உற்சவம ், நவராத்திர ி, விஜயதசம ி, தீபாவள ி, கார்த்திகை தீபம ், தனுர்மாத பூச ை, மாசிமகம் கருடசேவ ை, பங்குனி உத்திரம ், சித்திரை பிரம்மோற்சவம ், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமும் உபயதாரகள் மூலமும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும ், பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையும் சந்நிதிகள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!