Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்காடு கோடை விழா 28-‌ல் துவ‌க்க‌ம்

Webdunia
வெள்ளி, 21 மே 2010 (13:26 IST)
சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை‌க் கவரு‌ம் வகை‌யி‌ல், சுற்றுலா தலமான ஏற்காட்டில் வருகிற 28-ந் தேதி கோடை விழா துவ‌்‌ங்க உ‌ள்ளது. மல‌ர் க‌ண்கா‌ட்‌சி, படகு‌ப் போ‌ட்டி களை க‌ட்ட உ‌ள்ள இ‌ந்த கோடை ‌விழா 30ஆ‌ம் தே‌தி வரை தொட‌ர்‌ந்து 3 நா‌ட்க‌ள் நடைபெறு‌கிறது. இ‌த்தகவலை மாவட்ட வருவாய் அதிகாரி கலையரசி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நே‌ற்று நடைபெற்றது. கூட்டத ்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் மாவட்ட வருவாய் அதிகாரியும், ஆ‌ட்‌சியரு‌ம ான (பொறுப்பு) கலையரசி பே‌சினா‌ர்.

அ‌ப்போது, ஏற்காட்டில் இந்த ஆண்டு கோடை விழா வருகிற 28-ந் தேதி துவ‌ங்க உ‌ள்ளது. 30- ந் தேதி முடிய தொட‌ர்‌ந்து 3 நாட்கள் இந்த விழா நடைபெற ு‌ம ். இந்த விழாவை புதுமையான முறையிலும் சிறப்பான முறையிலும் நடத்த தோட்டக்கலை துறையின் மூலம் மலர் கண்காட்சி அமைக்கப்பட உ‌ள்ளது.

ஏற்காடு பூங்கா மற்றும் ஏரி ஆகிய பகுதிகளில் மின் அலங்காரம் செய்யவும், சுற்றுலாத் துறையின் மூலம் 28-ந் தேதி சினிமா நடிகர் எஸ்.வி.சே க‌ர் ப‌ங்கே‌ற்கு‌ம் நிகழ்ச்சியும், 30-ந் தேதி நடிகர் கிங்காங் ப‌ங்கே‌ற்கு‌ம் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. மேலும் 3 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் படகு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மேலும் சுற்றுலா துறை மூலம் படகு இல்லம், லேடீஸ் சீட், டெலஸ்கோப் கருவி கட்டிடம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் கரட ிய ூர் பகுதிக்கு சென்று வரும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கால்நடைத்துறை மூலம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் கண்காட்சி, கால்நடை கண்காட்சி, கால்நடை மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. அதுதவிர சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தவழும் குழந்தைகள் போட்டி, கோலப்போட்டிகள் நடத்தவும், விளையாட்டு துறை மூலம் சுற்றுலா பயணிகள் மலையேறும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன எ‌ன்று கலையர‌சி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments