Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
கடகம்-பலவீனம்
கடக ராசிக்காரர்கள் தனது காரியம் முடிவதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையும் பார்க்கமாட்டார்கள். கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவிற்கு செயல்களை செய்வர். பலரையும் இவர்கள் விரோதிகளாக கருதுவர். கெட்டவர்களுக்கு கெட்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு சில தீய ஆசைகளும் இருக்கும். தீயவைகளில் இருந்து விடுபட திங்கட் கிழமைகளில் விரதம் இருத்தல், 11 வாரங்கள் திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல், சிவனை வழிபடுதல் நல்லது. அரிசி, வெள்ளி, நெய், தயிர், பூ போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் அளிக்கலாம். மற்றவர்களை ஏளனம் செய்ய வேண்டாம். ஆலோசனை கூற வேண்டாம்.

ராசி பலன்கள்