தாய்லாந்து காடுகளில் பாதி ஆண், பாதி பெண் தன்மையுடன் கூடிய அரிய வகைச் சிலந்தி இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சிலந்திக்கு Damarchus inazuma என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிலந்தியின் உடல் நடுவில் சரியாக பிரிக்கப்பட்டு, இடதுபுறம் ஆரஞ்சு நிறத்துடனும் (பெண் பண்புகள் - பெரிய கோரைப் பற்கள்), வலதுபுறம் சாம்பல் நிறத்துடனும் (ஆண் பண்புகள் - சிறிய அளவு) காணப்படுகிறது.
உயிரினங்களில் ஆண்-பெண் திசுக்கள் மற்றும் பண்புகள் இரண்டும் இருப்பது 'கைனாண்ட்ரோமார்ஃபிசம்' எனப்படும். பேம்மெரிடே (Bemmeridae) குடும்பத்தில் இதுவே முதல் பதிவாகும்.
இது, ஆண் மற்றும் பெண் வடிவங்களுக்கு இடையில் மாறக்கூடிய திறன்கொண்ட 'ஒன் பீஸ்' அனிமேஷன் கதாபாத்திரமான இனாசுமாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
உள்ளூர் இயற்கையாளர்களால் கண்டறியப்பட்ட இந்த சிலந்தியை, சுலலாங்கார்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து, இது குரோமோசோம் பிழைகளால் ஏற்பட்ட புதிய இனம் என்பதை உறுதிப்படுத்தினர்.
இது சிறிய பூச்சிகளுக்கு விஷத்தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.