மியான்மரில் இருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி சென்ற ஒரு படகு, தாய்லாந்து - மலேசியா கடல் எல்லையை ஒட்டிய லங்காவி தீவு பகுதியில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த படகில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 13 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட சுமார் 300 அகதிகள் குழுவின் ஒரு பகுதியே இந்த விபத்தில் சிக்கிய படகு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரகு பணம் கொடுத்து மிகவும் அபாயகரமான இந்த கடல் பயணத்தை தொடங்கியதாக மீட்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். சமீப காலமாக, ரோஹிங்கியா அகதிகள் இதுபோன்ற அபாயகரமான பயணங்களை மேற்கொள்வதும், விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணியை மலேசிய கடல்சார் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.