டெஸ்லா நிறுவனத்தில் சைபர்ட்ரக் திட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த சித்தார்த் அவஸ்தி, 8 ஆண்டுகால பணிக்கு பிறகு விலகுவதாக அறிவித்துள்ளார்.
சித்தார்த் அவஸ்தி ஒரு பயிற்சியாளராக டெஸ்லாவில் இணைந்து, சைபர்ட்ரக்-இன் பொறியியல் முதல் பெருமளவு உற்பத்தி வரை தலைமை தாங்கும் அளவிற்கு உயர்ந்தார். மாடல் 3 திட்டத்திலும் அவர் முக்கிய பங்காற்றினார்.
சைபர்ட்ரக்கை 30 வயதுக்குள் நிஜமாக்கியது, மாடல் 3 உற்பத்தியை அதிகரித்தது போன்ற முக்கிய சாதனைகளை அவர் தனது லிங்க்ட்இன் பதிவில் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
"இது என் வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்று" என்று குறிப்பிட்ட அவர், டெஸ்லா நிறுவனத்திற்கும், எலான் மஸ்க்கிற்கும் நன்றி தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் நான்காவது முறையாக லாப சரிவைச் சந்தித்த நிலையில், சைபர்ட்ரக் தயாரிப்பு சவால்களை எதிர்கொண்ட நிலையில், சித்தார்த் அவஸ்தியின் விலகல் நடந்துள்ளது. எனினும், தனது அடுத்த திட்டம் குறித்து அவர் எதையும் வெளியிடவில்லை.