அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது வரிவிதிப்பு கொள்கையை ஆக்ரோஷமாக எதிர்ப்பவர்களை "முட்டாள்கள்" என்று விமர்சித்துள்ளார். தனது நிர்வாகம் மூலம் வசூலாகும் டிரில்லியன் கணக்கான டாலர் சுங்கவரி வருவாயை, $37 டிரில்லியன் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
பணக்காரர்களை தவிர்த்து, மற்ற ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் குறைந்தது $2,000 ஈவுத்தொகையாக வழங்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். இந்த கொள்கை அமெரிக்க பங்குச்சந்தையை உயர்த்தி, குறைந்த பணவீக்கத்துடனும் உலகின் பணக்கார நாடாக மாற்றியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சுங்கவரி விதிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியான சவால்கள் இருந்தாலும், ட்ரம்ப் அதைப் புறக்கணித்து, சுங்கவரியே தனது வலுவான பொருளாதார ஆயுதம் என்று வாதிடுகிறார்.