Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானைவிட்டு சர்தாரி தப்பி ஓட்டம்?

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (15:26 IST)
ஊழல் வழக்கில் நீதிமன்ற நெருக்கடி மற்றும் இராணுவத்திற்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஆகியவை காரணமாக பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி நாட்டைவிட்டு துபாய்க்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மருத்துவ பரிசோதனைக்காக சாதாரண முறையில் ஒரு நாள் பயணமாகவே இன்று துபாய் சென்றிருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியபோதிலும், திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ளதாகவும் மற்றொரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்தாரியின் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால், இராணுவ புரட்சி நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக அவர், முன்னெச்சரிக்கையாக துபாய் தப்பி சென்றிருக்கலாம் என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும்: சுப்பிரமணியன் சுவாமி

மோடி பதவியேற்கும் நேரத்தில் விளக்குகளை அணைத்து இருளில் இருந்த மம்தா பானர்ஜி..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள்.. ஜூன் 14ம் தேதி புதிய உத்தரவு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி மருமகள் போட்டியா?

மகன் தோல்வி .! பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!!

Show comments