நடிகர் விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். அந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தைப் பற்றிய புதுப்புது அப்டேட் வந்து கொண்டே இருக்கின்றன. விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வத்தை இந்த படம் தூண்டியிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்த படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் இது ஒரு மிகப்பெரிய செலிப்பிரேஷனாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் உள்ள ஜலில் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் மூன்று வருடங்கள் கழித்து மலேசிய ரசிகர்களை விஜய் சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் இது வெறும் இசை வெளியீட்டு விழாவாக இல்லாமல் மிகப்பெரிய திருவிழாவாக இருக்கப் போகிறது என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது .
கிட்டத்தட்ட 85 ஆயிரம் பேர் உட்காரக் கூடிய ஒரு பெரிய அரங்கம் தான் இந்த ஜலில் அரங்கம் என சொல்லப்படுகிறது. அதனால் கணக்குபடி பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை அந்த ஸ்டேடியத்தில் உட்காரலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த ஒரு அரங்கில் தான் ஜனநாயகம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது .இதற்காக பெரிய அளவில் செலவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
அதையும் மீறி இந்த விழாவிற்கு வருபவர்களுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறதாம். அந்த நாட்டின் நாணய மதிப்பு படி டிக்கெட் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவிற்கு கட்டணமா என்று கேட்கலாம். ஆனால் இது வெறும் இசை வெளியீட்டு விழா மட்டும் இல்லை .தளபதி கச்சேரியாக இதை பிளான் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை விஜய் 69 படங்களில் நடித்திருக்கிறார்.
அதில் 30 படங்களின் பாடல்களும் அங்கு கச்சேரிகளாக ஒலிக்கப்பட போவதாக சொல்கிறார்கள். அதற்காக அந்த 30 பாடல்களையும் படத்தில் பாடியவர்களே அந்த மேடையில் பாட இருக்கிறார்களாம். அதாவது ஒரு கான்சர்ட்டாக ப்ளான் செய்திருக்கிறார்கள். அதனால் இது தளபதி கச்சேரி. அதனுடன் சேர்த்து ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா என விஜய்க்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டியாக இந்த விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.