சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியல் தலைவராகவும் மாறிவிட்டார். அதோடு இரண்டு மாநாடுகளையும் நடத்தி காட்டினார். அந்த இரண்டு மாநாடுகளிலும் பல லட்சம் பேர் கலந்து கொண்டது பேசு பொருளாக மாறியது. அதோடு தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதேநேரம் இதுவரை அவர் யாருடனும் கூட்டணி அறிவிக்கவில்லை. விஜய் தனித்து நின்றால் அவர் நினைப்பது நடக்காது.. அதிமுக போன்ற கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைப்பதை அவருக்கும், அவரின் அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது என அரசியல் விமர்சகர்கள் உள்பட பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
தற்போது அது ற்றி விஜய் யோசிக்க ஆரம்பிப்பதாகவும், அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வசிந்தது. அது உண்மையா என்பது தெரியவில்லை. ஒருபக்கம் கரூர் சம்பவத்திலிருந்து இப்போதுதான் விஜயும், தவெகவினரும் மீண்டுள்ளனர். வரும் டிசம்பர் 4ஆம் தேதி விஜய் மீண்டும் தன சுற்றுப்பயணத்தை துவங்க திட்டமிட்டுருருந்தார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில் தேமுதிக கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இங்கு யாரும் எடுத்தவுடனே வந்துவிட முடியாது. நேற்று முளைத்த காளானெல்லாம் இங்கு எடுபடாது.. அது ஒரு நாள் மழைக்கே தாங்காது என்றெல்லாம் பேசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று முளைத்த காளான் என பிரேமலதா சொன்னது விஜயை மனதில் வைத்துதான் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதை மறுத்துள்ள பிரேமலதா நேற்று முளைத்த காளான் என நான் விஜயை குறிப்பிடவில்லை. அவர் எப்போதும் எங்க வீட்டு பிள்ளை.. விஜய்க்கு எப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இல்லை.. சினிமாவைப் போல அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் எனக்கூறி இருக்கிறார்.