Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சாம்பியன்கள் என்பதை இந்தியா நிரூபிக்குமா? நாளை முதல் ஒருநாள் போட்டி!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2011 (15:12 IST)
FILE
இங்கிலாந்தில் உலக சாம்பியன் இந்திய அணி வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் நாளை இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாதில் தொடங்குகிறது.

காயங்களிலிருந்து மீளாத இந்திய அணி, களைப்படைந்த கேப்டன் தோனி, அனுபவமற்ற பந்து வீச்சு வரிசை என்று இந்திய தரப்பில் ஏகப்பட்ட பலவீனங்கள் உள்ளன.

கவுதம் கம்பீர் முதலாளிகளுக்கு விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான் ஒரு நாள் தொடரில் எம்மாதிரியான மனோநிலையில் களமிறங்குவார் என்று கணிக்க முடியவில்லை.

பார்த்தீவ் படேல், அஜின்கியா ரஹானே துவக்க வீரர்களாக களமிறக்குவதை தொடரவேண்டும். கம்பீரை அணியில் சேர்த்து படேலை உட்கார வைப்பது அநீதியாகப் போய் முடியும். எனவே ரஹானே, படேல் துவக்கம், கம்பீர், கோலி, ரெய்னா, தோனி என்று வரிசை இருப்பது சிறந்தது. அதேபோல் பந்து வீச்சில் ஏறத்தாழ அனில் கும்ளே போல் வீசி வரும் லெக் ஸ்பின்னர் ராகுல் ஷர்மாவை அணியில் சேர்க்கவேண்டும், அவர் அதிர்ச்சி வீரராக அமைய வாய்ப்புள்ளது.

அஷ்வின், பிரவீண் குமார் சரியாக வீசினால் துவக்கத்தில் பிரவீணும் நடுவில் அஷ்வினும் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முடிந்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் குக், கீஸ்வெட்டர் அதிரடி பார்மில் உள்ளனர். பின்களத்தில் பேர்ஸ்டோ பந்துகளை நீண்ட தூரம் அடித்து துவம்சம் செய்வதில் வல்லவர். பிரெஸ்னனும் ஒரு ஆல்ரவுண்டர் தகுதியை எட்டியுள்ளார். பந்து வீச்சிலும் இங்கிலாந்து பலமாகவே உள்ளது.

அதுவும் இருமுனையிலும் இரு பந்துகள் முறை நாளை அமலாக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சிற்கு மவுசு கூடும். ஸ்பின்னர்கள் திணற வாய்ப்புள்ளக்டு.

பிரெஸ்னன் ரிவர்ஸ் ஸ்விங்கில் வல்லவர். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் வீச்சாளர்கள் இல்லை. வருண் ஆரோனுக்கு வாய்ப்பளிக்கலாம்.

FILE
இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணியாக உள்ளது. கிரகாம் ஸ்வானின் சுழற்பந்து கூடுதல் பலம் சேர்க்கிறது. பேட்டிங்கில் குக், கீஸ்வெட்டர், பேர்ஸ்டோ, டிராட், பெல் என்று மிகப்பலமாக உள்ளது. வோக்ஸின் பந்து வீச்சும் சிக்கனம் சேர்க்கிறது, டேர்ன்பாக்கின் ஸ்லோயர் பந்துகளும் யார்க்கர்களும் கடைநிலை இந்திய பேட்ஸ்மென்களுக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணிதான் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ராபின் உத்தப்பா அணிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

அதேபோல் யூசுப் பத்தான், இர்ஃபான் பத்தானுக்கும் வாய்ப்பு உள்ளது.

இது கடந்த முறை பீட்டர்சன் தலைமையில் வந்த மந்தமான இங்கிலாந்து அணியல்ல இது சவாலான இங்கிலாந்து அணி இளம் வீரர்களின் பின்னணியில் அதிரடி வீரர்களை களமிறக்கு வெற்றி கண்டு வருகிறது இங்கிலாந்து.

இந்தியா உலக சாம்பியனளே என்பதை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நிறைவேற்ற கடுமையாக பாடுபடவேண்டியுள்ளது.

இந்தத் தொடரின் போக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலேயே தெரிந்து விடும். உலக சாம்பியன்கள் என்ற கவுரத்தைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு இளம் இந்திய வீரர்கள் தலையில் விழுந்துள்ளது. நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளை பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி மதியம் 2.30 மணிக்குத் தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

Show comments