Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2009 (15:14 IST)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள் எனற புத்தகம்.

இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் பேராசிரியர் க. செல்வராஜ். நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.200.

தேசீயத்தையும், தெய்வீகத்தையும் தனது கண்களாகக் பாவித்து வாழ்ந்தவர் தேவர். இவரது பேச்சு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைவது இவருக்கு மற்றுமொரு சிறப்பு.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டு மக்களுக்காக பணியாற்றிய இவர், பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியிலும் சேர்ந்து தேசத்திற்கு தொண்டு செய்தார்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் சுமார் 4 ஆயிரம் நாட்கள் சிறைச்சாலையில் இருந்தவர் இவர்.

1937 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் நடந்த முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதில் இருந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டசபை சென்றவர்.

திருமணமே செய்து கொள்ளாமல் இந்த நாட்டையே தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்து மறைந்தவரின் வரலாற்றை படிக்க இந்த புத்தகம் உதவி புரியும் என்று நம்புகிறோம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments