Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ழ்‌க்கை‌க்கு‌ரிய வ‌ழிகா‌ட்டிக‌ள்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2010 (15:44 IST)
நமது ‌மு‌ன்னோ‌ர்க‌ளி‌ல் பல‌ர் வா‌ழ்‌க்கையை அத‌ன் போ‌க்‌கி‌ல் அனுப‌வி‌த்து அத‌ன் நெ‌ளிவு சு‌ளிவுகளை பொ‌ன்மொ‌ழிகளாக நம‌க்கு கூ‌றியு‌ள்ளன‌ர். அவ‌ற்றை‌ப் படி‌த்து அதனை‌ப் ‌பி‌ன்ப‌ற்ற முயலுவோ‌ம்.

பழகிய மனைவி, பழகிய நாய், தயாராக இருக்கும் பணம் ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய நண்பர்கள். ஒரு முட்டாளின் இதயம் அவன் வாயிலிருந்து வருகிறது. ஒரு புத்திசாலியின் வாய் அவன் இதயத்திலிருந்து வருகிறது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்

பைத்தியத்தன்மை கலக்காத மேதை உலகத்தில் யாரும் இல்லை. உங்கள் லட்சியங்களை தைரியமாக வெளியிடுங்கள். யார் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சாதீர்கள். உங்கள் லட்சியத்தைப் பார்த்து உலகம் உங்களை `பைத்தியக்காரன்' என்று கூறும். கூறட்டும்! உண்மையில், நீங்கள் மேதை!! மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன. யோசித்த பிறகு நாவை அசையுங்கள்.
- அரிஸ்டாட்டில்

பகுத்தறிவு என்பது உண்மையை அறிய கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கத் தக்கதும் அதுவே; ஆனால் நாம் அதைத்தான் நம்புவதில்லை. வாழ்க்கை ஒரு கேளிக்கைக் கூடம் என்பது எவ்வளவு பொய்யானதோ, அவ்வளவு பொய்யானதுதான் வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்ற எண்ணமும் ஆகும். வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே.
- டால்ஸ்டாய்

இன்பத்துக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது பிறரும் இன்பம் அனுபவிக்கும்படி நடந்து கொள்வதே. பிறருக்குத் துன்பம் செய்து உன்னால் இன்பம் அனுபவிக்க முடியாது. கருத்து வேறுபாடுகளை நாகரீகத்துடன் ஏற்றுக் கொள்வதும், அவற்றை அழுத்தமாக எதிராளிகள் சுட்டிக் காட்டும்போது ரசிப்பதும், மன வளர்ச்சியின் உன்னதமான அடையாளமாகும். உண்மைதான் மூளையின் எல்லைக்கோடு.
- இங்கர்சால்

செல்வத்தினால் வரும் புகழ் நிலைப்பதில்லை. சாதனையினால் வரும் புகழுக்கு எதுவும் ஈடாகாது. அனைவரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருப்பவர்களிடம் மட்டும் முறையிடுங்கள். நாம் எதை இழந்து விட் டாலும் கவுரவத்தை மட்டும் இழக்க இடம் தரக்கூடாது. மனத்திருப்தி நமக்கு இயற்கையாக கிடைத்த செல்வம். ஆடம்பரம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம்.
- சாக்ரடீஸ்

வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்க நாம் முயல வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி. கவலை வாழ்க்கையின் எதிரி. சுயநலம், பேராசை, கோழைத்தனம் முதலானவைதான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்மசத்ருக்கன். ஒரு மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு. ஆனால் அந்த மனிதனை வெறுக்காதே.
- ஷேக்ஸ்பியர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments