Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணை காட்டாதவனுக்கு கருணை கிடையாது

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (12:43 IST)
கடலூரில் பண‌த்‌தி‌ற்காக சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு கீழ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் விதித்த தூக்குத் தண்டனையை சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

கருணையே இ‌ல்லாம‌ல் ‌சிறுவனை கொலை செ‌ய்தவனு‌க்கு கருணை கா‌ட்ட முடியாது எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌ர்‌‌ப்‌பி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.

அ‌ந்த வழ‌க்‌கி‌ன் சாரா‌ம்ச‌ம், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் என்ற சுந்தர்ராஜன் (வயது 24), கூடலூரை‌ச் சே‌ர்‌ந்த பாலா‌‌யி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

பாலாயின் கணவர் புகழேந்தி வெளிநாட்டில் வசித்து வந்தார். அவர் பாலாயிக்கு சரிவர பணம் அனுப்புவதில்லை. இந்த நிலையில் மகேஸ்வரி என்பவர் தனது மகன் சுரேஷுடன் (7), பாலாயியின் வீட்டருகே வசித்து வந்தார். சுரேஷ் அங்குள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். மகேஸ்வரியின் கணவரும் வெளிநாட்டில் ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டு மனை‌வி‌க்கு பண‌ம் அனு‌ப்‌பி வ‌ந்தா‌ர்.

எனவே மகேஸ்வரியிடம் இருந்து பெரும் தொகையை மிரட்டிப் பெறுவதற்கு சுந்தரும், பாலாயியும் திட்டமிட்டனர். 27.7.09 அன்று மாலை 4.30 மணியளவில் வேனில் வந்திறங்கினான். அவனை சுந்தர் இடைமறித்தார்.

சுரேஷிடம் சுந்தர், உனது பாட்டிக்கு உடம்பு சரியில்லை, எனவே அவரைப் பார்ப்பதற்கு உனது அம்மாவும் சென்றுவிட்டார், எனவே அவரை பார்ப்பதற்கு உன்னை நான் அழைத்துச் செல்கிறேன். என்னுடன் மோட்டார் சைக்கிளில் வா என்று கூறி அவனை அழைத்துச் சென்றார்.

மகேஸ்வரியின் செல ்பே‌ச ி எண் இல்லை என்பதால் அவரது தோழி சரஸ்வதியிடம் சென்று செ‌ல் எண்ணை வாங்கினார், பின்னர் சுரேஷை 30 கிலோமீட்டர் தூரத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்தபடி மகேஸ்வரியிடம் சுந்தர் தொடர்பு கொண்டார்.

உனது மகன் என்னுடன்தான் இருக்கிறான். நீ எனக்கு ரூ.5 லட்சம் பணம் தந்தால் அவனை உயிரோடு விடுவேன். இல்லாவிட்டால் அவனை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினான். ஆனால் அவன் கேட்ட பணம் கிடைக்கவில்லை.

எனவே ஈவு இரக்கம் காட்டாமல் சுரேஷின் வாயைப் பொத்தி அவனை கழுத்தை நெறித்து சுந்தர் கொலை செய்தான். இந்த சம்ம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தினர். சுரேஷின் உடல் 30.7.09 அன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சுந்தரும், பாலாயியும் கைது செய்யப்பட்டனர். 2 பேர் மீதும் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடலூர் மாவட்ட மகளிர் ‌ நீ‌திம‌ன்ற‌ம் விசாரித ்து வ‌ந்தது. ‌விசாரணை முடிவடை‌ந்து கட‌ந்த ஜூலை மாத‌ம் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாலாயி மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால், சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து அவரை ‌ நீ‌திம‌ன்ற‌ம் ‌விடு தலை செய்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுந்தருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், சத்தியநாரயணன் ஆகியோர் விசாரித்தனர். சுந்தருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து அவர்கள் பிறப்பித்த உத்த ர‌வி‌ல், 7 வயதுள்ள சிறுவனை பணத்துக்காக கடத்தி, அந்தப் பணம் கிடைக்காததால் அவனை கொலை செய்யும் அளவுக்கு சுந்தர் சென்றுள்ளார். இது ஒரு கொடூரமான சம்பவம் மட்டுமல்ல, கருணையற்ற செயல்பாடாகும், இந்த சம்பவம் மனித சம ுதாயத்தின் மனச்சாட்சியை குலுக்கியுள்ளது.

சட்ட விரோதமாக பணம் கேட்டு அதை யாரும் கொடுக்காவிட்டால் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகின்றனர். இந்த சம்பவத்தில் சுந்தரின் செயல்பாடு, மனித பண்பாடுகளுடன் சம்பந்தப்படுத்த முடியாததாக உள்ளது.

சுந்தரின் செயல்பாடு முழுக்க முழுக்க மனித தொடர்பற்றது, முற்றிலும் மிருகத்தனமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இது தூக்குத் தண்டனைக்கு உகந்த அபூர்வமான வழக்குகளில் ஒன்று, சுந்தரின் கொடூரமான, மனிதத்தன்மை அற்ற, கருணையில்லாத செயல்பாட்டுக்கு பெருந்தன்மை காட்ட முடியாது.

அப்படி அவருக்கு பெருந்தன்மை காட்டி, தண்டனையை குறைத்தால் அது நீதி பரிபாலனையை கேலி செய்தது போல் ஆகிவிடும், எனவே அவருக்கு கருணை காட்ட முடியாது. அவருக்கு கீழ்க் கோர்ட்டு விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறோம் எ‌ன்ற ு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments