தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வுகள், சென்னையில் மட்டும் டிசம்பர் 1 முதல் 4 வரையிலும், டிசம்பர் 8 முதல் 10 வரையிலும் முற்பகலில் நடைபெறவுள்ளன.
தேர்வுக்கூட நுழைவு சீட்டை, விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -க்கு சென்று, தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.