தமிழ்நாடு அரசுப் பணிகளுக்காக வேலைக்கு எடுக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த இரண்டு பிரிவுகளிலிருந்தும் 625 காலியிடங்கள் அதிகரித்துள்ளதாகவும், கலந்தாய்வுக்கு முன் இன்னும் அதிகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தற்போது மொத்தமாக 1270 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பதால், இந்த தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதலாக 625 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.