தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் கல்விக்கொள்கை குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பின்வருமாறு:
அரசுப் பள்ளிகளில் இந்தி திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது, மேலும் எழுச்சிபெறும் இந்தியாவுக்கான பிரதம மந்திரி பள்ளிகள் திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. எனவே, மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது."
தமிழக அரசின் இருமொழி கொள்கையையும் மற்றும் தேசிய அளவில் அது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் மத்திய அரசு சரியாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் 2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அது பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகளில் தனது பங்களிப்பை வழங்க விரும்புகிறது. இது தமிழக அரசால் கூட்டாட்சி நிர்வாக முறைக்கு எதிரானதாக கருதப்பட்டு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது."
இந்த கேள்விக்கு,
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு', '
கூற்றும் காரணமும் சரி, மேலும் காரணமே கூற்றுக்கான சரியான விளக்கம்'
கூற்று தவறு, ஆனால் காரணம் சரி'
கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
விடை தெரியவில்லை
என ஐந்து பதில்கள் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கேள்விகள், அரசியல் சார்ந்த கருத்துகளைத் தேர்வு கேள்வியாக மாற்றுவதாகவும், இது அரசுத் தேர்வுகளின் நடுநிலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.