Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சம் பேரை திருப்பி அனுப்புகிறது குவை‌த்

Webdunia
திங்கள், 22 ஜூன் 2009 (11:40 IST)
ச‌ரியான ப‌ணி அனும‌தி இ‌ல்லாம‌ல் தனது நா‌ட்டி‌ல் த‌ங்‌கியு‌ள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரை திருப்பி அனுப்ப ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது குவை‌த் அரசு. இ‌தி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான இந்தியர் களு‌ம் அட‌ங்குவ‌ர்.

குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொக ைய ே 35 லட்சம ்தா‌ன். இ‌தி‌ல் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்து அங்கு குடியேறி வேலை செய்பவர்கள் ஆவார்கள். இந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள், அங்கு அலுவலகமோ, வர்த்தக நடவடிக்கைகளோ இல்லாத தனியார் நிறுவனங்கள் பண‌த்து‌க்கா க வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி கடிதம் கொடுத்த ு, அத‌ன் மூல‌ம் குவை‌த் நா‌ட்டு‌க்கு ஏராளமான தொ‌ழிலாள‌ர்களை அழை‌த்து வ‌ந்து‌ள்ளது. அவர்களுக்கு வேலை தரவோ, அதற்கான உத்தரவாதம் அளிக்கவோ அந்த ‌ நிறுவன‌ங்க‌ள் தயாராக இ‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், குவைத் வந்த தொழிலாளர்கள் அங்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாமல ், ‌சில‌ர் கிடைத்த வேலைகளை செய்து கொண்ட ு‌ம், பல‌ர் வேலையே இ‌ல்லாமலு‌ம் வா‌ழ்‌ந்து வரு‌கிறா‌ர்க‌‌ள்.

முறைகேடாக வெளிநாட்டு தொழிலாளர்களை அனும‌தி‌க்க ப‌ணி அனும‌தி அ‌ளி‌த்த ‌நிறுவன‌ங்க‌ள் மீது நடவடிக்கை எடுக்க குவைத் அ ரசு தீர்மானித்து உள்ளது. அதோடு இப்படி முறையான வேலை உத்தரவாதம் இல்லாமல் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரை அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப ்பவு‌ம் ‌‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவர்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அட‌ங்குவ‌ர்.

மேலும் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள், தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அப்படி குடியிருப்பு பகுதியில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குவைத் அமை‌ச்ச‌ர ் பாதில் சபர் தெரிவித ்து‌ள்ளா‌ர்.

எனவே ‌விரை‌வி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான இ‌‌ந்‌திய‌ர்க‌ள் குவை‌த் நா‌ட்டி‌ல் இரு‌ந்து ‌திரு‌ம்புவா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

Show comments