மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைக்கும் 'வாக்குத் திருட்டு' குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும், அவர் ஆதாரமற்று பேசுவதை தவிர்த்து, முறையான வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிகாரில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "காங்கிரஸ் கட்சி குறை சொல்வதற்கு வேறு வழியில்லாததால், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது" என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "பிகாரில் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி கருதினால், அவர் உடனடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் தொடர்ந்து அரசியலமைப்புக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறி வருகிறார்.