பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!
, வியாழன், 6 நவம்பர் 2025 (13:34 IST)
ஹரியானா தேர்தலில் வாக்கு மோசடி நடந்ததாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டால், சம்பந்தப்பட்ட புகைப்படத்தை எடுத்த பிரேசில் புகைப்பட கலைஞர் மத்யூஸ் ஃபெரேரோ (Matheus Ferrero), சமூக ஊடக தொந்தரவு காரணமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியுள்ளார்.
2017-ஆம் ஆண்டில் ஃபெரேரோ எடுத்த இந்த புகைப்படம், இலவச ஸ்டாக் தளங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இந்த படத்தைக் காண்பித்து, ஒரு பிரேசில் பெண்ணின் படம் ஹரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மத்யூஸ் ஃபெரேரோ, தனது கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகவும், இது ஒரு இலவசப் படம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். படத்தில் இருக்கும் பெண், லரிசா நேரி, தானொரு மாடல் அல்ல என்றும், ஏமாற்றுவதற்காக தன்னை இந்தியர் போல் சித்தரிப்பதாகவும் ஆச்சரியத்துடன் வீடியோ வெளியிட்டார்.
அடுத்த கட்டுரையில்