மகாராஷ்டிராவில் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் முறைகேடு குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.
"இது வாக்குத் திருட்டால் அமைக்கப்பட்ட அரசின் நிலத் திருட்டு" என்று அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். என்டிஏ-வுக்கு ஜனநாயகம் மற்றும் தலித்துகளின் உரிமைகள் மீது அக்கறை இல்லை என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் மோடியின் மௌனத்தை கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, "தலித்துகளின் உரிமைகளை பறிக்கும் கொள்ளையர்களால்தான் உங்கள் அரசு இயங்குவதால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?" என்றும் வினவியுள்ளார்.