பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் திருட்டு மூலம் பதவியை பிடித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஹரியானாவில் நடந்ததாக கூறப்படும் வாக்குத் திருட்டு தொடர்பான 'எச் ஃபைல்ஸ்' என்ற ஆதாரங்களை வெளியிட்டார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் மூலம் பாஜக வெற்றி பெற்றதாகவும், தேர்தல் ஆணையம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
"மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து இந்திய அரசியலமைப்பின் 'ஒருவருக்கு ஒரு வாக்கு' என்ற அடிப்படை உரிமையைத் தகர்க்கிறார்கள். இது ஹரியானா, பிஹார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடக்கிறது," என்று அவர் கூறினார்.
இந்த வாக்குத் திருட்டு குறித்து நாட்டின் இளம் தலைமுறையினருக்கு தெளிவாக எடுத்துரைப்போம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.