'வாக்குத் திருட்டு' குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் ஊர்மி என்பவர், அழியாத மை வைக்கப்பட்ட தனது விரலுடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், "மோடி-பைடு இந்தியாவுக்காக வாக்களித்தேன். போய் சென்று ஓட்டு போடுங்கள், பீகார்" என்று பதிவிட்டிருந்ததால், ஒருவர் இரு மாநிலங்களில் வாக்களித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்தது.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் இதை ஒரு 'போலி மக்கள் ஆணை' என்றும், பாஜகவின் 'வாக்குத் திருட்டு ஸ்டார்ட் அப்' என்றும் விமர்சித்தனர். அரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றதாக எழுந்த முந்தைய குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த, காங்கிரஸார் இந்த காட்சியைப் பயன்படுத்தினர்.
சர்ச்சை அதிகமானதால், வழக்கறிஞர் ஊர்மி, தனது பதிவு பீகார் வாக்காளர்களை ஊக்குவிக்க மட்டுமே என்றும், தான் மகாராஷ்டிராவில்தான் வாக்களித்ததாகவும் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் பீகார் தேர்தல் நேரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.