மத்திய பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு காகித தட்டுகளில் பரிமாறப்படுவது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்திய மத்திய பிரதேச பயணத்தின்போது இச்சம்பவம் குறித்து அறிந்த ராகுல், இது தொடர்பாக பிரதமர் மற்றும் முதலமைச்சரை நோக்கித் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்தார்.
மத்தியப் பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக, பள்ளி குழந்தைகளின் மதிய உணவு தட்டுகளைக்கூட அபகரித்துவிட்டது."
"நாட்டின் எதிர்காலம் குறித்துக் கனவு காணும் அப்பாவி குழந்தைகளுக்கு, மதிய உணவுக்கான மரியாதைகூட கிடைப்பதில்லை என்பதை அறிந்து வேதனையடைந்தேன்."
"மாநிலத்தில் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக, குழந்தைகளின் தட்டையும் திருடிவிட்ட நிலையில், வளர்ச்சி குறித்த அவர்களின் அறிவிப்புகள் வெறும் மாயைதான். ஆட்சிக்கு வருவதுதான் அவர்களின் உண்மையான ரகசியம்."
இத்தகைய மோசமான சூழலில், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பேசுவதற்கு மத்திய பிரதேச முதலமைச்சரும், பிரதமரும் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராகுலின் இந்த விமர்சனம், மாநிலத்தில் ஆளும் பாஜக மீதான ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.