அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக, விமானி மீது குற்றம் சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12 அன்று லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தலைமை விமானி சுமித் சபர்வால் இந்த விபத்தில் பலியானார்.
விபத்துக்கு காரணம், விமானி எரிபொருள் ஸ்விட்சுகளை அணைத்ததுதான் என விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை எதிர்த்து, உயிரிழந்த விமானியின் தந்தையும், இந்திய விமானிகள் கூட்டமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்று கூறி, விமானி மீது குறை சொல்ல முடியாது எனத் தீர்ப்பளித்தது. மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.