உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி ஆரியன் மிஸ்ரா வடிவமைத்த இந்த சித்திரத்தில், அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி 'இராமர்' வேடத்திலும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சக்திகள் 'பத்து தலை இராவணன்' உருவிலும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
அநீதிக்கு எதிராக போராடி உண்மை வெல்ல செய்பவராக இராமரின் அடிச்சுவடுகளில் ராகுல் காந்தி சித்தரிக்கப்பட்டுள்ளார். இராவணனின் பத்து தலைகளாக, மத்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்புகளான அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ ஆகியவற்றுடன் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
இராமாயணத்தின் இந்த கருப்பொருளைப் பயன்படுத்தி, 'ராமர் இராவணனைக் கொன்றது போல, ராகுல் காந்தி இந்த சவால்களுக்கு தீர்வு காண்பார்' என்று காங்கிரஸ் நிர்வாகி விளக்கமளித்துள்ளார். இந்த சித்திரம், மத்திய அமைப்புகளை நேரடியாக இராவணனாக சித்தரித்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.