ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வாழ்த்து கூறாததை பாஜக கண்டித்துள்ளது. மீண்டும் ஒருமுறை, பாகிஸ்தான், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் ஒரே பக்கத்தில் நிற்கிறார்கள்" என்று விமர்சனம் செய்யப்படுகிறது.
பாஜகவின் முக்கிய தலைவர் மாள்வியா, காங்கிரஸ் கட்சியின் அமைதி குறித்து கூறியபோது, "ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அற்புதமான வெற்றி, ராகுல் காந்தி மற்றும் முழு காங்கிரஸையும் கோமா நிலைக்கு தள்ளியதாக தெரிகிறது.
ஆபரேஷன் சிந்துர் வெற்றிக்கு பிறகு, இந்திய இராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனது போலவே, இப்போதும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை தேசத்துடன் கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் உள்ள மொஹ்சின் நக்வி மற்றும் பிறரிடம் அனுமதி பெறுவதற்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறது," என்று கூறியுள்ளார்.
அதையெல்லாம் ஒதுக்கி வையுங்கள், இந்தத் தொடரில் பாகிஸ்தானை மூன்று முறை தோற்கடித்து, ஆசிய கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காக எங்கள் தேசிய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஒரு சமூக ஊடகப் பதிவுகூட காங்கிரஸ் தரப்பிலிருந்து இல்லை," என்று மாள்வியா மேலும் கூறினார்.