இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை கோவாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
கர்நாடகம் மற்றும் கோவாவுக்கு ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமர், கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம் மடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை திறந்துவைக்கிறார். மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிலை திறப்புக்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.
நாளை பிற்பகல் ராமர் சிலையை திறந்துவைத்த பின், பிரதமர் அங்குள்ள கூட்டத்தில் உரையாற்றுவார். மேலும், இந்த நிகழ்வின் நினைவாக சிறப்பு அஞ்சல் முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஒன்றையும் அவர் வெளியிடுவார்.
கோவா நிகழ்வுக்கு பிறகு, பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் உடுப்பில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பகவத் கீதையை ஓதுவார்கள்.