புட்டபர்த்தியில் நடந்த ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
ஐஸ்வர்யா ராய், தனது உரையை தொடங்கும் முன், மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியின் காலில் தொட்டு ஆசீர்வாதம் பெற்றார். அதன் பின்னர் அவர், சாய் பாபாவின் போதனைகளை நினைவு கூர்ந்து, "ஒரே ஒரு ஜாதிதான் உண்டு, அது மானுடம் என்னும் ஜாதி. ஒரே ஒரு மதம்தான் உண்டு, அது அன்பு என்னும் மதம். ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்தவர்" என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு நன்றி தெரிவித்த அவர், "உண்மையான தலைமை என்பது சேவை" என்று சாய் பாபா கூறியதையும், வாழ்க்கைக்கு தேவையான 'ஐந்து D'கள் (கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு, பக்தி, தீர்மானம், விவேகம்) பற்றிய பாபாவின் போதனைகளையும் நினைவுகூர்ந்தார்.
இந்த விழா, சாய் பாபாவின் கருணை மற்றும் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் வகையில் அமைந்தது.