Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி..!

Advertiesment
earthquake

Siva

, செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (09:26 IST)
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அதன் அளவு 5.1 ரிக்டர் அளவிலுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தொடர்ந்து திடீர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று காலை 6.10 மணியளவில் மேற்குவங்க மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. கொல்கத்தா மற்றும் மேற்குவங்கத்தின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்குவங்க மாநிலத்திலும் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் வீதியினை அடைந்து, வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எந்த விதமான சேதம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒருவர், "அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன். விழித்திருந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது என்னைப் போலவே பலரும் நிலநடுக்கத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறி அச்சத்துடன் இருப்பதை பார்த்தேன்" என்று கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால்  கொல்கத்தா மற்றும் சில பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு தரும் எருமை மாட்டிற்காக திருமணம்... மணமகன், மணமகள் மீது வழக்குப்பதிவு..!