கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசா மாநிலத்தின் பலாசோர் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டதாக தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், விரைவில் ரயிலை சரி செய்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.