மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் கைகள் வெட்டப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் பிணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கொல்கத்தா பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு வீட்டில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி தங்கி இருந்தனர். அவர்கள் மூவரும் கைகள் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், உயிரிழந்த இரண்டு பெண்களின் கணவர்கள் மற்றும் மகன் பயணம் செய்த கார், சாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மூன்று பெண்கள் தங்களுடைய வீட்டில் பிணமாக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. எனவே, இதன் மூலம் ஆறு பேரும் திட்டமிட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.