டெல்லியில் இன்று காலை திடீரென நிகழ்ந்த சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து வருகின்றன.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5:36 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நில அதிர்ச்சியை படுக்கையில் உணர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், சில வினாடிகள் அதிர்வை உணர்ந்ததாகவும், அதனால் வீட்டை விட்டு அச்சத்துடன் வெளியே ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவித சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.