பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான நேர்லூர் கிராமத்தில், புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் அதிர்ச்சிக்குரிய பகல் நேரக் கொள்ளைச் சம்பவம் நடந்தது.
திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மூன்று கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நாகவேணியின் நம்பிக்கையை பெற்றனர். பேச்சு கொடுத்து சமையலறைக்கு சென்ற நாகவேணியை, அவர்களில் ஒருவர் பின் தொடர்ந்து சென்று, கைகள் மற்றும் கால்களை கட்டி போட்டதோடு கத்தியை காட்டி மிரட்டினார்.
ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல், நாகவேணியை அறைக்குள் பூட்டிவிட்டு தப்பி சென்றது. அண்டை வீட்டாருக்கு அவர் தகவல் அளித்ததை தொடர்ந்து, காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டது.
அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மூன்று சந்தேக நபர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளன. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.