கோயம்புத்தூர் இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் கடத்தப்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சிகள் குறித்த சர்ச்சை பற்றி, மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.
"ஒரு வெள்ளை நிறக் காரில் பெண் சத்தம் போட்டுக் கொண்டு சென்றதாக 100-க்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன," என்று அவர் தெரிவித்தார். ஆய்வில், காரின் எண் தெளிவாக தெரியவில்லை என்றும், காருக்குள் பெண் இருந்ததற்கான தெளிவான பதிவு எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆணையர் கூறினார்.
இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும், காவல்துறை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன எண் தெளிவாக தெரிந்தவுடன் அடுத்தகட்ட விசாரணை தொடரும் என்றும் ஆணையர் சரவணசுந்தர் உறுதி அளித்துள்ளார்.