Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Advertiesment
nainar nagendran

Prasanth K

, வெள்ளி, 7 நவம்பர் 2025 (10:25 IST)

கடந்த சில நாட்கள் முன்பு கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே கோவையில் இருகூர் பகுதியில் பெண் ஒருவர் கதற கதற கடத்திச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கண்டன பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் “தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை!

 

தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே! வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலயம் அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு!” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!