பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் எஸ்.எஸ். சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா தேர்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்கு முறைகேடுகளை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா காந்தி, "நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது. பொதுமக்களை ஏமாற்றுவோரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த அதிகாரிகளின் பெயர்களை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது" என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, ராகுல் காந்தியும் அரியானா தேர்தலில் 25 லட்சம் போலி வாக்குகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பீகார் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 11 வரை நடக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தியின் இந்த நேரடி மிரட்டல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.