கோயம்புத்தூர், இருகூர் தீபம் நகர் பகுதியில் நேற்று மாலை, நடுரோட்டில் ஒரு இளம் பெண் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் அப்பெண்ணை இழுத்து ஏற்றி, அலறல் சப்தத்துடன் அதிவேகமாக காரை செலுத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண் யார், கடத்தலுக்கான காரணம் என்ன, கார் எங்கு சென்றது என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் நடந்த நிலையில், இந்த நடுரோட்டு கடத்தல் முயற்சி பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.