பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் துணை முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா கற்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோரிஹாரி கிராமத்திற்கு விஜய் குமார் சின்ஹா செல்ல முயன்றபோது, சின்ஹாவின் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல், மாட்டுச் சாணம் மற்றும் செருப்புகள் வீசி, முழக்கமிட்டு தடுத்துள்ளனர். இது ஆர்.ஜே.டி-யின் ரவுடித்தனம் என்றும், தனது வாக்குச்சாவடி முகவர்களை அவர்கள் வாக்களிக்க விடவில்லை என்றும் சின்ஹா குற்றம் சாட்டினார்.
மாவட்ட போலீஸ் பலவீனமானது என்று விமர்சித்த சின்ஹா, மத்திய படைகளை நிலைநிறுத்த கோரி, அதே கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சட்டம்-ஒழுங்கை மீற யாரையும் அனுமதிக்க முடியாது என்று கூறி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பீகார் டிஜிபி-க்கு உத்தரவிட்டார். உள்ளூர் போலீஸ் இது கிராம மக்களின் போராட்டம் என்று கூறியுள்ளது.