Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுமை வளர்ச்சியில் தமிழ்நாடு 3வது இடம்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (12:27 IST)
1995 ஆம் ஆண்டு காடுகள் மற்றும் பசுமைப் பகுதிகளை அதிகப்படுத்தியதில் தமிழகம் 3வது சிறந்த மாநிலம் என்று மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மக்களவையில் தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவு 6,269 சதுர கிமீ அதிகரித்துள்ளது.

1995 ஆம் ஆண்டு பசுமைப் பரப்பு 17,045 சதுர கி.மீ என்பதிலிருந்து 23,314 சதுர கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும் பசுமைப் பரப்பு வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும் உள்ள்து.

ஆனாலும் ஒட்டுமொத்த தேசியக் காடுகள் கொள்கையின் படி 33% காடுகள் பகுதி இருக்கவேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் 17%மட்டுமே உள்ளது. தேசிய சராசரியான 23%க்கும் கீழே தமிழ்நாடு உள்ளது.

ஆந்திராவும், மத்திய பிரதேசமும் காடுகள் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளதாக ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு காடுகள் வளர்ச்சி துறையும், காடுகளில் வாழும் உள்ளூர் மக்களின் முயற்சியும்தான் தமிழ்நாடு இதில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் என்று நிபுணர்கள் குழு கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

Show comments