Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலம் கற்பிக்கும் மையம்: அமைச்சர் தென்னரசு துவக்கினார்

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2009 (18:08 IST)
தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் சென்னையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆங்கில மொழி கற்பிக்கும் மையத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று துவக்கி வைத்தார்.

webdunia photo
WD
பிரிட்டிஷ் கவுன்சிலின் நூலக செயல்பாடுகளின் இணை இயக்குனர் ராப் இலயன்ஸ், இங்கிலாந்து தூதரக (கலாசாரத்துறை) அமைச்சர் ருத் ஜி (பிரிட்டிஷ் கவுன்சில் பிரிவு) ஆகியோர் புதிய மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னையில் புதிதாக துவக்கப்பட உள்ள மையத்தில் 1,600 பேர் பயிலும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலப் புலமையில் சிறந்து விளங்கும் 12 இந்திய ஆசிரியர்கள் மற்றும் 2 கல்வித்துறை மேலாளர்கள் புதிய மையத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மையத்தில் உள்ள வகுப்பறைகள் அனைத்திற்கும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளதுடன ், இணையதள சேவை மற்றும் ஆடியோ-விஷுவல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் ஆங்கிலப் புலமை பெறுவதற்கான வகுப்பில் சேர 044-4205 0600 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? டிரம்ப்பின் 500% வரி உயர்வு அச்சுறுத்தலால் பாதிப்பா?

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

Show comments