Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஷன் துறையில் குறுகிய கால படிப்புகள்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (12:09 IST)
சென்னையில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் தற்போது ஓராண்ட ு, 6 மாதங்கள் மற்றும் 3 மாத கால பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

ஃபேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம ், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பம ், ஃபேஷன் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்ப ு, ஆடை ஏற்றுமதி வர்த்தக நிர்வாகம ், ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட ஓராண்டு படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.

இதேபோல் கம்ப்யூட்டர் மூலம் காலணி வடிவமைப்ப ு, தோல் பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 மாத காலப் படிப்புகளும ், கம்ப்யூட்டர் உதவியுடன் மாதிரி உருவாக்குதல ், சில்லரை வணிக மைய வடிவமைப்ப ு, கம்ப்யூட்டர் உதவியுடன் ஆடை மற்றும் ஹோம் ஃபேஷன் வடிவமைப்ப ு, பிரிண்டிங் டிசைன் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பு உள்ளிட்ட 3 மாத கால பகுதி நேர படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தின் கல்வித்துறையில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நேரில் ரூ. 100-க்கான வரைவோலை சமர்ப்பிக்க வேண்டும். தபாலில் பெற ரூ.150-க்கான வரைவோலையை (தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகத்தின் பெயரில ், சென்னையில் செலுத்தத்தக்கது) அனுப்பி விண்ணப்பங்களை பெறவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 -2254 2755 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Show comments