Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபலங்களின் பார்வையில் "கிறிஸ்துமஸ்"

Webdunia
மனிதன் தான் பிறந்தது முதல் கொண்டாட்டங்களையும் சடங்குகளையும் உருவாக்கி கொண்டான். பண்டிகை என்பது மனித குலத்தில் ஒரு வளமான பண்பாடு. இன்னும் சொல்லப்போனால் எப்போதும் அழுதுக்கொண்டும ், முட்டி மோதிக்கொண்டும் இருப்பது மட்டுமே மனித குலத்தின் இயல்பல்ல. கடுமையான நெருக்கடிகளின் மத்தியிலேயும் மகிழ்ச்சியின் ஒளிக்கீற்றைக் கண்டு குதூகலிப்பது மனித இயல்பு.

சாமான்யன் முதல் சாம்ராஜ்யங்களை ஆள்வோர் வரை கொண்டாட்டமென்பது பொதுதான். ஆனால் கொண்டாடுகிற விதம்தான் வித்தியாசமானது. கிறிஸ்துமஸ ் ஒரு மனித நேய விழா. பிரபலங்கள் எப்படி கிறிஸ்துமஸை பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா.

தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் அருட் திரு. வின்சென்ட் சின்னதுர ை, டி.வி. பிரபலம் ஜேம்ஸ ் வசந்தன ், திரைப்பட இசை அமைப்பாளர் இமான ், திரைப்பட பின்னணி பாடகி கிரேஸ ், சிறுகதை எழுத்தாளர் வினோலியா நீதி ஆகியோரை வெப் உலகம் சார்பில் சந்தித்தோம்.


பேதங்கள் இல்லா த, பிளவுகள் இல்லாத சமத்துவ எண்ணம் கொண் ட, மனித நேயம் கொண் ட, அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ்கிற சமுதாயமாய ், மனிதனாய் நாம் மாற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதே இக்கிறிஸ்மஸ ் பெருவிழா...

கிறிஸ்துமஸ ் என்பது கொடுக்கும் காலம். வசூலிக்கும் காலமல்ல. தேவன் தன் ஒரே மகனையே இந்த மண்ணுக்காக "கொடுத்த" காலம். எனவே வசூல் அல்லது நன்கொடை என்ற பெயரில் யாரிடமும் பெறாமல் நாமே ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும்...

கிறிஸ்துமஸ ் காலங்களில் கொஞ்சம் அதிகமான உதவிகள் செய்வோம். முன்பெல்லாம் வரும் வாழ்த்துக்களைவிட இப்போது சினிமா துறைக்கு வந்த பின் திரைப்பட துறையினரிடமிருந்து வாழ்த்துக்கள் வருகிறது...

இந்த வருட கிறிஸ்துமஸுக்கு ஒரு சிறப்பு உண்டு. மடிப்பாக்கத்தில் அப்பா வீட்டில் மூன்றாவது மாடியில் ஒரு சேப்பல் (சர்ச்) கட்டியுள்ளார். அதில் இந்த வருட கிறிஸ்துமஸ ் வழிபாட்டில் கலந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று உள்ளம் பூரிக்கிறார் கிரேஸ ்...

கடவுள் தன் சொந்த மகனையே இந்த உலகுக்கு தந்த நாள் கிறிஸ்துமஸ ். கடவுள் மனிதனை அளவுக்கு அதிகமாக நேசித்ததன் விளைவு தான் கிறிஸ்துமஸ ்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – ரிஷபம் | Pongal Special Astrology Prediction 2025

திருவண்ணாமலை ஆருத்ரா தரிசனம், கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – மேஷம் | Pongal Special Astrology Prediction 2025

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (10.01.2025)!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

Show comments