Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரு வருகையால் பொருளாதாரம் முன்னேறும்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2010 (17:00 IST)
பின்னடைவில் இருந்த உலகப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்தியாவினுடைய ஏற்றுமதி உயர்ந்து வருகிறது. பங்குச் சந்தையில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். பொருளாதார ரீதியாக அடுத்த ஐந்தாண்டுகளில் பங்குச் சந்தை உட்பட இந்தியாவின் பொருளாதாரம் எப்படியிருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன ்:

பொருளாதார ரீதியாக பார்க்கும் போது இந்தியாவிற்கு 9வது இடத்திற்கு மே மாதம் 2ஆம் தேதி குரு வருகிறார், அதாவது 02.05.2010. இந்த குருமாற்றம் உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்கும். வீழ்ந்து கிடக்கிற சாஃப்ட்வேர் துறையாக இருந்தாலும் சரி, பங்குச் சந்தையாக இருந்தாலும் சரி, புது முதலீடுகள், புதிய தொழில் தொடங்குதல் இவையெல்லாமே முன்னேற்றம் காண ஆரம்பித்துவிடும். அப்படி பார்க்கும்போது இந்தியாவினுடைய பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி தடைபடாமல் போய்க்கொண்டிருக்கும். அதில் பிரச்சனை இருக்காது.

ஆனால் மறுபக்கம் கடனும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி இரண்டுமே போய்க் கொண்டிருக்கும். இதில் அந்நிய சக்திகளின் ஆதிக்கம், வேற்று நாடுகளின் முதலீடு - அவர்கள் வந்து நமது தொழிலை எடுத்துக் கொண்டார்கள் என்று சொல்வார்களே - அதுபோன்று அவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டியதாகப் போய்விட்டது. இங்கு குலத் தொழில், சுதேசித் தொழில் செய்தவர்கள் எல்லாம் நசுங்கிவிட்டார்கள் என்கின்ற மாதிரி போகும்.

புதுப் பணக்காரர்களெல்லாம் உருவாகிறார்கள். பாரம்பரியமாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஓரம்கட்டப்பட்டு விட்டார்கள். அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது போன்ற நிலையை இந்தச் சனி ஏற்படுத்துவார். அதனால், இங்கு இருக்கிறவர்களும் கொஞ்சம் முயன்று தொழில் செய்தால் சரியாக இருக்கும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments