Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிர‌ஸ், ‌தி.மு.க. உறவு ‌நீடி‌க்குமா?

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (19:57 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: காங்கிரஸ், தி.மு.க. உறவு இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?

ஜோ‌தி ட ர‌‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: தி.மு.க. தலைமைக்கு தற்பொழுது ஜாதகம் கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. அதேபோல, காங்கிரஸ் தலைமைக்கும் ஜாதகம் கடுமையாக இருக்கிறது. தி.மு.க. தலைவர் மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசியைச் சார்ந்தவர். த‌ற்பெ ாழுது மிருகசீரிட நட்சத்திரத்திலேயே கேது போய்க் கொண்டிருக்கிறார். கேது என்றைக்கு மிருகசீரிட நட்சத்திரத்திற்கு வந்ததோ அந்தக் காலகட்டத்தில் இருந்தே தி.மு.க. தலைமைக்கு போதாத காலம் தொடங்கிவிட்டது.

அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தற்பொழுது சனி மோசமான இடத்தில் இருக்கிறார். 4ஆம் இடம் கண்டகச் சனி என்று கூறுவார்கள். அந்த இடத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது, ஒருவிதமான புழுக்கமான நிலை, உறவில் மனம்விட்டுப் பேச முடியாத நிலை போன்றுதான் இருக்கும். மனக்கசப்புகளுடன் பேசிக்கொள்வது, கை குலுக்கிக்கொள்வது போன்ற அமைப்புகள்தான் தற்போது தொடரும்.

ஆனால், சனி மாற்றத்திற்குப் பிறகு வேறு மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உறவு முறியும் என்று சொல்ல முடியாது. உறவு என்பது பெயரளவில் இருக்கும். ஆனால், உறவு இருந்தால் அடையக் கூடிய சில பயன்கள் இல்லாமல் போகும். ஏனென்றால் சனி அப்படிதான் செய்வார். ஒப்புக்கு இருக்கிறது என்று சொல்வார்களே, அதுபோல ஒப்புக்கு இருக்கும், உயர்வுக்கு இந்த உறவு பயன்படாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments