Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌க்டோப‌ர் மாத எ‌ண் ஜோ‌திட‌‌‌ம் : 2, 11, 20, 29

Webdunia
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனநிம்மதி பெருகும். புது முயற்சிகள் வெற்றியடையும். குடும்பவருமானத்தை உயர்த்த எண்ணுவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். தலைவலி, இடுப்புவலி நீங்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும்.

உறவினர்களின் விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். அரசு ஊழியர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.

உணவு, புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணிகளை விரந்து முடிப்பீர்கள். மேலதிகாரி பாராட்டுவார். கலைத் துறையினர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். விட்டுப்போன தொடர்புகள் துளிர்க்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 2, 8, 11, 17, 20, 26, 29
அதிர்ஷ்ட எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments